காமராஜர் தளம்- முக்கிய அறிவிப்பு

காமராஜர் பற்றிய இந்த தளம் காமராஜர் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாகவே பயன்படவேண்டும் என்று விரும்புகிறேன். தன்னுடைய எதிரிகளை காமராஜரே அன்போடு அரவணைத்தார் .......ஆகவே இந்த தளத்தில் தனி மனித தாக்குதலோ, கட்சிகளை பற்றிய விமர்சனமோ இடம் பெறாது என்று அறிவித்துகொள்கிறேன். பின்னூட்டம் இடுவோர் இதை மனதில் கொண்டு தனிமனித தாக்குதல் இல்லாத பின்னூட்டம் இடும்படி கேட்டுக்கொள்கிறேன். காமராஜருக்கு அடுத்து அவர் குடும்பத்தில் யாரும் அரசியலில் ஈடுபடவில்லை, இது அரசியல் பேசும் தளமல்ல, தியாகமே உருவான உன்னத தலைவரின் நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் தளம்.
Read more....

நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா

2 வருடங்களுக்கு முன்பு dandanakka.blogspot.com'ல் படித்த ஒரு பதிவை இங்கே வெளியிடுகிறேன்.

"தலைவர் (காமராஜ்) வழக்கம் போல தனது முன்அறையில் அமர்ந்து வந்தோரோடு அளவளாவியும், அனுப்பிக்கொண்டும் இருந்தார். நாங்கள் நால்வரும் (அரு.சங்கர், தனுஷ்கோடி, டி.எஸ்.டி.ராஜா, டி.ஏ.எம்.ஏ.மாரிமுத்து)முன்னேறி அறையில் இடம் பிடித்து விட்டோம்.அப்போது நாங்கள் சற்றும் எதிபாராத நிலையில் பதினெட்டு வயது இளைஞன் ஒருவன், மிக உரிமையுடன் தலைவர் முன் வந்து நின்றான்.அவன் கையில் ஒரு அச்சடிக்கப்பட்ட வெள்ளைதாளிருந்தது. "என்னடா கனகவேல், என்னா விஷயம்?...என்னது காகிதம்" கேட்டபடியே வாங்கி படித்தார்.இளைஞன் பேச ஆரம்பித்தான், "தாத்தா, எம்.பி.பி.எஸ்-க்கு அப்ளிகேசன் போட்டேன், இன்டர்வி நடந்திருச்சு, நீங்க சி.எம்-கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கனா இடம் கிடைச்சுரும், லிஸ்ட் போடுறதுக்குள்ள சொல்லுங்க தாத்தா, எங்க குடும்பத்துல நான் ஒருத்தனாவது படுச்சி டாக்டராகி விடுவேன்" என கெஞ்சுகிறான்.தலைவரின் பக்கவாட்டில் மிக அருகில் நின்றிருந்த எனக்கு தலைவரின் கையில் இருந்த அந்த தாளின் சில வாசகங்கள் சில தெளிவாக தெரிந்தன. அதில்...

C/O THIRU. K. KAMARAJ
ALL INDIA CONGRESS COMITTEE PRESIDENT
8,THIRUMALAI PILAI ST
MADRAS-17

என ஒரு கேள்விக்கு பதிலாக எழுதி இருந்தது. தலைவரின் அடுத்த கேள்வியும் அது பற்றியதாகவே இருந்தது..."ஆமா, என் பேரை எதுக்கு எழுதினே?""இல்ல தாத்தா, என் மெட்ராஸ் அட்ரஸ் கேட்டிருந்தாங்க, எனக்கு உங்களை தவிர இங்கே வேறுயாரையும் தெரியாதே...இன்டர்வியூவலயும் கேட்டாங்க...தாத்தான்னு சொன்னேன்". அந்த இளைஞன் யாரென்பது இப்போதுதான் எனக்கு புரிந்தது. காமராஜரின் ஒரே தங்கை திருமதி. நாகம்மாளின் மகள் வழி பேரன்."கனகவேலு, இந்த டாக்டர் படிப்பு, இன்ஞினியர் படிப்புக்கெல்லாம் அரசாங்கம் ஒரு கமிட்டி போட்டிருக்கும். அவுங்க தேர்ந்தெடுக்கிறவங்களுக்குத் தான் இடம் கிடைக்கும். எல்லாறுக்கும் பொதுவா கமிட்டியை போட்டுட்டு, பிறகு இவனுக்கு சீட் குடு, அவனக்கு சீட் குடுன்னு சிபாரிசு பண்றதுன்னா பிறகு அதுக்கு கமிட்டியே போட வேண்டியதில்லையே... நீ நல்லா பதில் சொல்லி இருந்தீன்னா உனக்கு கிடைக்கும். கிடைக்கலேன்னா பேசாம கோயமுத்தூரில் பி.எஸ்.சி அக்ரிகல்சர்னு ஒரு பாடம் இருக்கு, அதிலே சேர்ந்து படி... அந்த படிப்புக்கு நல்ல எதிர் காலம் இருக்கும். என்னால் சிபாரிசு பண்ண முடியாது" என்று சொல்லி அவன் தந்த தாளையும் அவனிடம் தந்து அனுப்பிவிட்டார். அவனை அனைவரும் அனுதாபத்தோடு பார்த்தனர். அவனுக்கு மருத்துவ படிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை."


அந்த கனகவேல் இப்போது .........

Read more....

kamaraj Funeral video-காமராஜ் இறுதியாத்திரை video

காமராஜரின் இறுதி யாத்திரை வீடியோ பதிவு.....(From the movie Kamaraj)
Read more....

kamaraj video -"நாடு பார்த்ததுண்டா" பாடல் வீடியோ

காமராஜரின் அரிய வீடியோ பதிவுகளை கொண்ட "நாடு பார்த்ததுண்டா" என்ற காமராஜரின் புகழ் பாடும் "காமராஜர்" பட பாடல்.....


youtubeல் காண கிடைத்தது.....அனுப்பிய காமராஜர் அபிமானிக்கு நன்றி.
Read more....

காமராஜ் மறைந்த அன்று வந்த பத்திரிக்கைகள் அரிய தொகுப்பு.


காமராஜர் இறந்த அன்று வெளிவந்த பத்திரிக்கை செய்திகளின் அரிய தொகுப்பு.Read more....

காமராஜரின் பாரதரத்னா விருது-காப்பி


காமராஜருக்கு வழங்கபட்ட பாரத ரத்னா விருதின் போட்டோ காப்பி தான் இது. விருதுநகரில் soundarapandiyan தெருவில் உள்ள காமராஜரின் தங்கை மகன் திரு.மோகன் அவர்கள் வீட்டு ஹாலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது. பத்திரிக்கையாளர்கள் எப்போதாவது வந்து போட்டோ எடுத்து செல்வது உண்டு.
Read more....

காமராஜர் படுத்த தொட்டில்(100 ஆண்டு பழமையானது)


குடும்பத்தில் முதல் குழந்தையாக காமராஜர் பிறந்த போது அன்னை சிவகாமி அம்மாள் காமராஜருக்காக அந்த காலத்தில் தேக்கு மரத்தினால் ஆன இந்த தொட்டிலைத்தான் (ஊன்ஜல் போன்றது) பயன்படுத்தினார்.
காமராஜருக்காக செய்யப்பட்டது இது. இப்போதும் நல்ல நிலையில் உள்ளது. பரண் மேல் தூங்கும் இது குடும்பத்தில் புது வரவுகள் பிறக்கும் போது மட்டும் கீழே வருவது உண்டு. (சம்பிரதாயத்திற்கு ஒரு முறை குழந்தைகளை இதில் படுக்க வைப்பதது உண்டு)
Read more....

காமராஜரின் தங்கை - kamaraj's sister Nagammal


காமராஜரின் தங்கை திரு.நாகம்மாள் மற்றும் அவரது மகன்கள் திரு.ஜவஹர்-திரு.மோகன் ஆகியோர் காமராஜரின் பாரதரத்னா விருதுடன் இருக்கும் அரிய புகைப்படம்.
Read more....

Kamarajar's Radio speech (voice) காமராஜரின் குரல்


போர் நடந்து கொண்டிருந்த சமயம் நமது இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக காமராஜர் radio'வில் ஆற்றிய உரை......

file: (kamaraj_radio_speech.mp3)
size: 209 kb

To Listen click here: kamaraj voice
To Download : kamaraj voice download

Get this widget | Track details | eSnips Social DNA
Read more....

Recent Posts