பெரியாரை பற்றி காமராஜர் தங்கை மருமகள் கூறுகிறார்
தமிழ் மணத்தில் பெரியார் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்து வரும் இந்த நேரத்தில் பெரியார் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை சந்தித்த சம்பவத்தை காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா சொல்கிறார் கேளுங்கள்.
"காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க,
ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ
பாக்க வந்தாரு , அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு
"அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்" னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார்.
அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல் ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு
மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க.
பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது.
ஐயா (காமராஜர்) பேசுனா அது மேடைல பேசுற மாதிரி இருக்காது சாதரண ஆளா தான் பேசுவாரு , ஆனா அவரு ஒரு பொய் கூட சொல்ல மாட்டாரு, ஐயா மாதிரி ஒரு ஆள இனிமே யாருமே பாக்க முடியாது. அவருமாதிரி தனக்குன்னு எதுவுமே யோசிக்காத மனுசன என் வாழ்கைல நான் பார்த்ததே இல்ல.
ஐயாவ எல்லோரும் கருப்பு காந்தின்னு சொல்லுவாங்க, ஐயா ஒரு கருப்பு தங்கம் , அய்யாவோட அம்மா அதுக்கு நேர் மாறா நல்லா சிவப்பா இருப்பாங்க, அவங்க முகத்த பார்த்தாலே ஒரு அன்பான பார்வை தான் தெரியும், காமராஜர் சினிமாவுல சிவகாமி அம்மாவா ஒருத்தவங்க நடிச்சிருந்தாங்க, அத பார்த்தா ஏதோ பாவமா இருந்தது. ஆனா நிஜத்துல சிவகாமி அம்மாவா பார்த்தா தெய்வீகமா இருப்பாங்க."
ஆம்!பெரியார் மேடையிலே கொள்கைச்
ReplyDeleteசிங்கம்!
நேரிலோ அன்புத் தங்கம்!
சிறியவர்கட்கும் மரியாதை கொடுத்து அவர்கள் சொல்வதைப் பொறுமையுடன்
கேட்டு பதில் சொல்வார்.
காமராஜர் பதவி விலகியதைக் கேட்டதும்
துடி துடித்து "இது தங்களுக்கும்,தமிழகத்திற்கும் தற்கொலையாகும்" என்று தந்தி அடித்து,அனைத்து நிகழ்ச்சிகளையும்
(உடல் நலத்திற்காகக் கூடச் செய்ய மாட்டார்} தள்ளி விட்டுச் சென்னைக்கு ஓடி வந்து காமராசரிடம் வேண்டிக் கொண்டார்.
காமராசரோ பண்டித நேருவைக் காப்பாற்ற வேண்டிய கடமையாற்றினார்.
பெருமூச்சி விடத்தான் முடியுது....
ReplyDeleteஉங்களை எல்லாம் பார்க்க முடியாம போனது,
பாக்கியமற்ற தலைமுறைனு நினைக்க வைக்குது..
நாட்டை வளர்க்கும் தலைவர்கள் உங்கள் தலைமுறையோடு போய்விட்டனர் போலும் . இப்போது தங்கள் வீட்டை வளர்கவே தலைவர்கள் முழைகின்றார்கள்.
ReplyDeleteKarma Veerar...Anaivarukkum Kalvi thantha Thalivar...
ReplyDeleteAvaraippattri Sollavo, Yezhuthavo vaarthaikal ilaai...D. Manohar Raj
காமராசர் போன்ற தலைவர்கள் பிறப்பால் உருவாவதில்லை. பெற்றோரின் வளர்ப்பாள் மட்டுமே அறியப்டுகிறார்கள். திருமதி சிவகாமி அம்மையார் போன்ற தன்னலமற்ற பெற்றோர்களே தேவை.
ReplyDeleteI was not born during that era but still reading this I was moved to tears. See the simplicity of people of that era... really a rarity these days.
ReplyDelete