காமராஜர் தாயார் இறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் Kamaraj Rare Photos











காமராஜர் தன் தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே, ஆனால் அவருக்கு இருந்த மனப்பக்குவமும் மனவுறுதியும் அசாத்தியமானது, அவர் தாயார் இறந்த அந்த துக்கமான நிகழ்வை கூட அவர் பக்குவமாகவே கையாண்டார், எந்த நிலையிலும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை.

அன்னை சிவகாமி அம்மாள் உடல்நலம் குன்றி இருந்தபோது காமராஜர் விருநகரில் தன் தாயாரோடு கூடவே இருந்து கவலையோடு அன்னையை பார்த்துக்கொண்டு இருந்தாராம், பின்பு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வர , அன்னையரை பிரிய மனம் இன்றி டெல்லி பயணம் மேற்கொண்டாராம், இதுவே அவர் அன்னையாரை கடைசியாக பார்த்தது.

அன்னையார் மறைந்த செய்தி கேட்டு விருதுநகர் வந்த காமராஜர் , தன் அன்னையார் அருகிலேயே அமர்ந்து இருந்தாராம். அச்சமயம் அவர் மிக பெரிய தேசிய தலைவராக இருந்த போதிலும் அவர் அன்னையாரின் இறுதிச்சடங்கை சாதரண முறையிலே ஆர்பாட்டமில்லாமல் நடத்தினார்.
இங்கே உள்ள படங்களில் மொட்டை அடித்து காணப்படும் இரண்டு பேர் காமராஜரின் தங்கை மகன்களான திரு.ஜவகர் மற்றும் திரு மோகன்.

காமராஜர் எவ்வளவு சாதாரண எளிமையான மனிதர் என்பதை இந்த படங்களின் பின்னணியில் தெரியும் காமராஜரின் விருதுநகர் வீட்டை பார்த்தாலே தெரியும்.
Photo Collections: Vandhana

9 comments:

VSK said...

நிகழ்வின் தாக்கத்தை விட தன்னிகரில்லா தனிப்பெரும் தலைவனின் எளிமையும், மனவுறுதியும், படாடோபமில்லாத அமைதியும் மனதை நெகிழச் செய்தது.

இப்படி ஒரு தலைவன் இனி நமக்குக் கிடைப்பானா என ஏங்குவதைத் தவிர வேறொன்றும் சொல்ல இயலவில்லை.
நன்றி ஐயா!

இரா. தேவாதிராஜன் said...

மனிதர் என்றால் இவர்தான் மனிதர். இருக்கும் போது இவ்வுலகத்தில் வாழ்ந்து மறைந்த பிறகு மக்களின் உள்ளத்தில் வாழ்கிறார்.... இவரின் புகழ் இவ்வுலகம் உள்ளவரை இருக்கும்....

Unknown said...

உங்களைப் போல வாழ ஆசை!!!

Anonymous said...

yenrum vazhum karmaveerar...

Thevathi Rajan said...

மக்களுக்காக வாழ இவரைப்போல எல்லோரும் இருந்தால் நாடே சுபிக்ஷ நிலையை என்றோ அடைந்திருக்கும். ஆனால் இனி அதற்கு வாய்ப்பே இல்லையேன்றே சொல்லும் அளவிற்கு இப்போதைய நம்மவர்கள் இருக்கின்றார்கள். நாட்டுக்காக உழைக்கும் நல்லவர்கள் இருந்தால் மட்டுமே எந்தவொரு நாடும் முன்னேறும்.....

Unknown said...

I love my kamarasar.......... I love so much...........

Unknown said...

God.....

Unknown said...

The king maker and king of TN Great Leader & Great Master

MOTHER'S HANDICRAFTS said...

ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட இப்படி ஒரு மகத்தான மக்கள் தலைவர் பிறக்கமாட்டார்,இவர்வாழ்ந்த பூமியில் நாமும் வாழ்கிறோம் என்று பெருமை கொள்கிறேன்

Post a Comment