பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தங்கை மகனான திரு.ஜவஹர் காலமானார்


பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தங்கை மகனான திரு.ஜவஹர் அவர்கள் இன்று (Jun 26 2020) காலை 9.30 அளவில் உடல்நலகுறைவால் தனது விருதுநகர் வீட்டில்  காலமானார், அவருக்கு வயது 85.

இந்த தகவலை காமராஜரின் தங்கை நாகம்மாள் குடும்பத்தினர் சார்பாக பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இறுதிசடங்கு விருதுநகர் சௌந்தர பாண்டியன் சாலையில் உள்ள எமது இல்லத்தில் நடைபெறும்.

Read more....

Kamaraj Very Rare HD Photos - Russia Visit


Read more....

Kamaraj Photos - காமராஜர் படங்கள்

 

கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும். படங்களில் காமராஜர் உடன் இருப்பவர்கள் பற்றி அறிய இந்த பக்கத்திற்கு செல்லவும்.

handshake-kamaraj indiragandhi-kamaraj kamaraj-annadurai kamarajar kamaraj-bhutto kamaraj-campaign kamaraj-cardriver kamaraj-children kamaraj-colleaques kamaraj-friends kamaraj-house kamaraj-indiragandhi kamaraj-indiragandhi-karunanithi kamaraj-kannadasan kamaraj-karanataka-rajkumar-bandaribai kamaraj-karunanithi kamaraj-meet kamaraj-ministers kamaraj-morarji kamaraj-mother-sivakami kamaraj-nehru kamaraj-periyar kamaraj-poor-people kamaraj-prison kamaraj-queen-elizebeth kamaraj-school kamaraj-sivaji-alseenivasan kamaraj-sivaji-nedumaaran kamaraj-tribes kamaraj-with-oldlady young-kamaraj

Read more....

காமராஜர் வீட்டு கல்யாணம் | kamaraj photos


காமராஜரின் தங்கை மகன் திரு.மோகன் அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Read more....

காமராஜர் பற்றிய மென்நூல் | kamaraj e-book download

காமராஜர் பற்றிய மென்நூல்
டவுன்லோட் செய்து நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் download செய்ய இங்கே கிளிக் செய்யவும். (Right click-save as)Read this doc on Scribd: kamaraj kamaraj tamil articles
Read more....

பெரியாரை பற்றி காமராஜர் தங்கை மருமகள் கூறுகிறார்தமிழ் மணத்தில் பெரியார் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்து வரும் இந்த நேரத்தில் பெரியார் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை சந்தித்த சம்பவத்தை காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா சொல்கிறார் கேளுங்கள்.

"காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க,

ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ
பாக்க வந்தாரு , அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு
"அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்" னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார்.

அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல் ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு

மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க.

பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது.

ஐயா (காமராஜர்) பேசுனா அது மேடைல பேசுற மாதிரி இருக்காது சாதரண ஆளா தான் பேசுவாரு , ஆனா அவரு ஒரு பொய் கூட சொல்ல மாட்டாரு, ஐயா மாதிரி ஒரு ஆள இனிமே யாருமே பாக்க முடியாது. அவருமாதிரி தனக்குன்னு எதுவுமே யோசிக்காத மனுசன என் வாழ்கைல நான் பார்த்ததே இல்ல.

ஐயாவ எல்லோரும் கருப்பு காந்தின்னு சொல்லுவாங்க, ஐயா ஒரு கருப்பு தங்கம் , அய்யாவோட அம்மா அதுக்கு நேர் மாறா நல்லா சிவப்பா இருப்பாங்க, அவங்க முகத்த பார்த்தாலே ஒரு அன்பான பார்வை தான் தெரியும், காமராஜர் சினிமாவுல சிவகாமி அம்மாவா ஒருத்தவங்க நடிச்சிருந்தாங்க, அத பார்த்தா ஏதோ பாவமா இருந்தது. ஆனா நிஜத்துல சிவகாமி அம்மாவா பார்த்தா தெய்வீகமா இருப்பாங்க."
Read more....

காமராஜர் தாயார் இறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் Kamaraj Rare Photosகாமராஜர் தன் தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே, ஆனால் அவருக்கு இருந்த மனப்பக்குவமும் மனவுறுதியும் அசாத்தியமானது, அவர் தாயார் இறந்த அந்த துக்கமான நிகழ்வை கூட அவர் பக்குவமாகவே கையாண்டார், எந்த நிலையிலும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை.

அன்னை சிவகாமி அம்மாள் உடல்நலம் குன்றி இருந்தபோது காமராஜர் விருநகரில் தன் தாயாரோடு கூடவே இருந்து கவலையோடு அன்னையை பார்த்துக்கொண்டு இருந்தாராம், பின்பு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வர , அன்னையரை பிரிய மனம் இன்றி டெல்லி பயணம் மேற்கொண்டாராம், இதுவே அவர் அன்னையாரை கடைசியாக பார்த்தது.

அன்னையார் மறைந்த செய்தி கேட்டு விருதுநகர் வந்த காமராஜர் , தன் அன்னையார் அருகிலேயே அமர்ந்து இருந்தாராம். அச்சமயம் அவர் மிக பெரிய தேசிய தலைவராக இருந்த போதிலும் அவர் அன்னையாரின் இறுதிச்சடங்கை சாதரண முறையிலே ஆர்பாட்டமில்லாமல் நடத்தினார்.
இங்கே உள்ள படங்களில் மொட்டை அடித்து காணப்படும் இரண்டு பேர் காமராஜரின் தங்கை மகன்களான திரு.ஜவகர் மற்றும் திரு மோகன்.

காமராஜர் எவ்வளவு சாதாரண எளிமையான மனிதர் என்பதை இந்த படங்களின் பின்னணியில் தெரியும் காமராஜரின் விருதுநகர் வீட்டை பார்த்தாலே தெரியும்.
Photo Collections: Vandhana
Read more....

Recent Posts