Kamaraj Photos - காமராஜர் படங்கள்

 

கிளிக் செய்து பெரிதாக பார்க்கவும். படங்களில் காமராஜர் உடன் இருப்பவர்கள் பற்றி அறிய இந்த பக்கத்திற்கு செல்லவும்.

handshake-kamaraj indiragandhi-kamaraj kamaraj-annadurai kamarajar kamaraj-bhutto kamaraj-campaign kamaraj-cardriver kamaraj-children kamaraj-colleaques kamaraj-friends kamaraj-house kamaraj-indiragandhi kamaraj-indiragandhi-karunanithi kamaraj-kannadasan kamaraj-karanataka-rajkumar-bandaribai kamaraj-karunanithi kamaraj-meet kamaraj-ministers kamaraj-morarji kamaraj-mother-sivakami kamaraj-nehru kamaraj-periyar kamaraj-poor-people kamaraj-prison kamaraj-queen-elizebeth kamaraj-school kamaraj-sivaji-alseenivasan kamaraj-sivaji-nedumaaran kamaraj-tribes kamaraj-with-oldlady young-kamaraj

Read more....

காமராஜர் வீட்டு கல்யாணம் | kamaraj photos






காமராஜரின் தங்கை மகன் திரு.மோகன் அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
Read more....

காமராஜர் பற்றிய மென்நூல் | kamaraj e-book download

காமராஜர் பற்றிய மென்நூல் டவுன்லோட் செய்து நேரம் கிடைக்கும் போது படிக்கலாம் download செய்ய இங்கே கிளிக் செய்யவும்.
Read more....

பெரியாரை பற்றி காமராஜர் தங்கை மருமகள் கூறுகிறார்



தமிழ் மணத்தில் பெரியார் பற்றி ஆக்கபூர்வமான விவாதங்கள் நடந்து வரும் இந்த நேரத்தில் பெரியார் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாளை சந்தித்த சம்பவத்தை காமராஜரின் தங்கை மருமகள் தங்கம்மா சொல்கிறார் கேளுங்கள்.

"காமராஜரோட தாயார் சிவகாமி அம்மாவ பாக்க பல தலைவர்கள் அடிக்கடி வருவாங்க, சிவகாமி அம்மா எங்க மாமியாரை விட (காமராஜரின் தங்கை நாகம்மாள்) என்னிடம் அன்பாக நடந்து கொள்வாங்க,

ஒரு தடவை தாடி வச்ச சாந்தமான பெரியவர் ஒருவர் சிவகாமி அம்மாவ
பாக்க வந்தாரு , அப்புறம் தான் தெரியும் அவர் தான் தந்தை பெரியாருன்னு, அவரு ரொம்ப சாந்தமா இருந்தாரு , அம்மா கூட அன்பா பேசிகிட்டு இருந்தாரு, போகும் போது அவரு
"அம்மா நான் உங்களுக்கு ஒன்னும் வாங்காம வந்துட்டேன், கொஞ்சம் இருங்க வந்துடுறேன்" னு சொல்லிட்டு கார்ல இருந்து ஒரு ஹார்லிக்ஸ் பாட்டில் மாதிரி ஒன்னு கொண்டு வந்து கொடுத்தாரு. "இத சாப்பிடுங்க உடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு போனார்.

அன்னைக்கு சாயந்திரம் விருதுநகர் பொட்டல் ல அவரு மீட்டிங் பேசுனாரு, நானும் கேக்க போனேன், காலைல அவளோ சாந்தமா இருந்த பெரியாரா இப்படி ஆவேசமா பொளந்து கட்டுறார்" னு எனக்கு தோனிச்சு

மத்தவங்க பேசுறத விட வித்யாசமா இருந்தது அவரு பேச்சு, அதனால நெறைய பேரு கேட்டு கிட்டு இருந்தாங்க.

பெரியாரு எவளோ பெரிய ஆளுன்னு அப்போ தான் எனக்கு புரிஞ்சது, அவரமாதிரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு பேசுற வங்கள எல்லாம் இந்த காலத்துல பாக்க முடியாது.

ஐயா (காமராஜர்) பேசுனா அது மேடைல பேசுற மாதிரி இருக்காது சாதரண ஆளா தான் பேசுவாரு , ஆனா அவரு ஒரு பொய் கூட சொல்ல மாட்டாரு, ஐயா மாதிரி ஒரு ஆள இனிமே யாருமே பாக்க முடியாது. அவருமாதிரி தனக்குன்னு எதுவுமே யோசிக்காத மனுசன என் வாழ்கைல நான் பார்த்ததே இல்ல.

ஐயாவ எல்லோரும் கருப்பு காந்தின்னு சொல்லுவாங்க, ஐயா ஒரு கருப்பு தங்கம் , அய்யாவோட அம்மா அதுக்கு நேர் மாறா நல்லா சிவப்பா இருப்பாங்க, அவங்க முகத்த பார்த்தாலே ஒரு அன்பான பார்வை தான் தெரியும், காமராஜர் சினிமாவுல சிவகாமி அம்மாவா ஒருத்தவங்க நடிச்சிருந்தாங்க, அத பார்த்தா ஏதோ பாவமா இருந்தது. ஆனா நிஜத்துல சிவகாமி அம்மாவா பார்த்தா தெய்வீகமா இருப்பாங்க."
Read more....

காமராஜர் தாயார் இறந்த அன்று எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் Kamaraj Rare Photos











காமராஜர் தன் தாயார் மீது மிகுந்த பாசம் வைத்திருந்தார் என்பது நமக்கு தெரிந்ததே, ஆனால் அவருக்கு இருந்த மனப்பக்குவமும் மனவுறுதியும் அசாத்தியமானது, அவர் தாயார் இறந்த அந்த துக்கமான நிகழ்வை கூட அவர் பக்குவமாகவே கையாண்டார், எந்த நிலையிலும் அவர் உணர்ச்சிவசப்படவில்லை.

அன்னை சிவகாமி அம்மாள் உடல்நலம் குன்றி இருந்தபோது காமராஜர் விருநகரில் தன் தாயாரோடு கூடவே இருந்து கவலையோடு அன்னையை பார்த்துக்கொண்டு இருந்தாராம், பின்பு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வர , அன்னையரை பிரிய மனம் இன்றி டெல்லி பயணம் மேற்கொண்டாராம், இதுவே அவர் அன்னையாரை கடைசியாக பார்த்தது.

அன்னையார் மறைந்த செய்தி கேட்டு விருதுநகர் வந்த காமராஜர் , தன் அன்னையார் அருகிலேயே அமர்ந்து இருந்தாராம். அச்சமயம் அவர் மிக பெரிய தேசிய தலைவராக இருந்த போதிலும் அவர் அன்னையாரின் இறுதிச்சடங்கை சாதரண முறையிலே ஆர்பாட்டமில்லாமல் நடத்தினார்.
இங்கே உள்ள படங்களில் மொட்டை அடித்து காணப்படும் இரண்டு பேர் காமராஜரின் தங்கை மகன்களான திரு.ஜவகர் மற்றும் திரு மோகன்.

காமராஜர் எவ்வளவு சாதாரண எளிமையான மனிதர் என்பதை இந்த படங்களின் பின்னணியில் தெரியும் காமராஜரின் விருதுநகர் வீட்டை பார்த்தாலே தெரியும்.
Photo Collections: Vandhana
Read more....

காமராஜ் கூறினார் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான

முன்னால் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் தனது மகளுடன் காமராஜரின் விருதுநகர் வீட்டிற்கு வந்திருந்தபோது எடுத்த படம்- இந்த படத்தில் பின்னணியில் நீங்கள் காண்பது தான் காமராஜரின் விருக்துநகர் வீட்டின் உண்மையான தோற்றம் . ஆனால் இப்போது இந்த பழமையான தோற்றத்தை நீங்கள் அந்த வீட்டில் பார்க்க முடியாது. இப்போது அது வூட் பாலிஸ் செய்யப்பட்டு டைல்ஸ் பதிக்கப்பட்டு பகட்டாக தோற்றம் அளிக்கிறது.
இப்படி பல தலைவர்கள் வந்தாலும் அந்த வீட்டில் ஒரு மின்விசிறி கூட அப்போது கிடையாது. இந்த படத்தில் காமராஜருக்கும் சாஸ்திரி அவர்களின் மகளுக்கும் நடுவே நிற்பது காமராஜரின் தங்கை மகன் ஜவகர் மற்றும் அவரது மனைவி தங்கம்மாள் - அவர் கையில் இருப்பது ஜவகரின் முதல் குழ்ந்தை சுலோச்சனா. ஜவகர் அவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ஆண் குழ்ந்தை பிறந்த போது தான் சிவகாமி அம்மாள் அந்த வீட்டில் தன் பேரனுக்கு ஒரு மின்விசிறி கட்டாயம் வேண்டும் என்று முதன் முதலில் ஒரு மின்விசிறி மாட்டினார். மூன்றாவதாக பிறந்த அந்த பையனுக்கு காமராஜ் என்று பெயர் வைத்தனர். காமராஜ் என்ற பெயர் தமிழகம் முழுவதும் பலாயிரக்க்கணக்கில் எத்தனையோ குழந்தைகளுக்கு பெயர் வைக்கப்பட்டாலும் காமராஜர் குடும்பத்தில் இன்று வரை இரண்டு பேருக்கு மட்டும் தான் அந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த உன்னதமான பெயரை குழந்தைக்கு வைத்து எப்படி அழைப்பது? மரியாதை குறைவாக இருக்கும் அல்லவா?
இந்த பதிவில் kamaraj101.blogspot.com தளத்தில் வெளியான ஒரு கட்டுரையை சேர்க்க விரும்புகிறேன்

///////////// காமராஜ் முதல்வராக இருந்தபோது அவரது அன்னையாருக்கு செலவுக்கு மாதம் ரூ.120 கொடுத்துக் கொண்டிருந்தார். அது போதவில்லை என்பதற்கு அன்னையார், முருக தனுஷ்கோடியிடம் ஒரு காரணத்தைக் கூறினார்.

" அய்யா முதல் மந்திரியாக இருப்பதால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். வடநாட்டைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர் கொடுக்காமல் எப்படி அனுப்புவது? ஆகையால், அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது" என்று கேட்டுக் கொண்டார். முருக தனுஷ்கோடி சென்னை வந்ததும் காமராஜிடம் சொன்னார். ஆனால் அவரோ 120 ரூபாய்க்கு மேல் கொடுக்க மறுத்துவிட்டார். " யார் யாரோ வருவார்கள். உண்மைதான். அவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா? அவர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். தவிர கையில் கொஞ்சம் ரூபாய் சேந்தால் அம்மா எங்காவது கோவில், குளம் என்று போய் விடுவார்கள். வயதான காலத்தில் வெளியூர் போவது நல்லதல்ல. எனவே இப்போது கொடுத்துவரும் 120 ரூபாயே போது" என்று சொல்லிவிட்டார்.

அதேபோல், அன்னையார் தமது மகள் நாகம்மாளின் மகன் ஜகவருக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும் வீட்டில் கக்கூஸ் அமைக்க பக்கத்தில் ஒரு இடம் ரூ.3000 த்துக்கு வாங்க வேண்டும் என்றும் முருக தனுஸ்கோடியிடம் கூறினார்.

ஒரு முதலமைச்சரின் வீட்டில் இந்த வசதி கூட இல்லாவிட்டால் எப்படி?

இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த தனுஷ்கோடி, காமராஜை சந்தித்துக் கூறினார். உடனே காமராஜ் " நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய். ஊரில் உள்ளவன், நான் பங்களா வாங்கிவிட்டதாக சொல்லுவான். சிலர் பத்திரிக்கையில்கூட எழுதுவார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ" என்று கோபமாக பேசி அனுப்பினார்.


அவர் வகித்த முதலமைச்சர் பதவி, அவரது வாழ்க்கை நிலையில் எந்த மாற்றத்தையும் எற்படுத்த அனுமதித்ததில்லை.\\\\\\\\\\\\\\\\\






இந்திரா காந்தியுடன் காமராஜரின் தங்கை நாகம்மாள் மற்றும் அவரது மகன்கள் ஜவகர்-மோகன்
Read more....

காமராஜரின் இதுவரை வெளிவராத அரிய புகைப்படங்கள் - kamaraj photos





காமராஜர் தன்னுடைய தங்கை மகன் திருமண விழாவில் பங்கேற்ற போது எடுத்த படங்கள். நாடார் திருமணங்களில் தாய்மாமன் சாஸ்திரம் என்று ஒரு சடங்கு செய்வார்கள், பெண்ணுடைய தாய்மாமனும் மாப்பிள்ளையுடைய தாய்மாமனும் இந்த சடங்கில் பங்கேற்பர். தன் தங்கை மகனுக்காக காமராஜர் தாய்மாமன் சடங்கில் பங்கெடுத்த போது எடுத்த படங்கள்.

காமராஜர் குடும்பத்தில் அதிக பற்று இல்லாதவர் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது உண்மை இல்லை. காமராஜர் சிறுவயதிலேயே விதவையான தன் தங்கையையும், தங்கையின் நான்கு பிள்ளைகளையும், தன் தாயையும் அவர் குறையின்றி பார்த்து கொண்டார். தன் கடமைகளை செவ்வனே நிறைவேற்றினார். தன் பதவியை தன் குடும்ப உறுப்பினர்கள் கூட தவறாக பயன்படுத்திவிட கூடாது என்ற உறுதியுடன் இருந்தார்.
Read more....